News January 25, 2026
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 இன்று கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. முதல் டி20-ல் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், புதிய உத்திகளுடன் NZ களமிறங்கவுள்ளது.
Similar News
News January 30, 2026
நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 அரசு Apps

இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் வசதிக்காக பல சேவைகளை செயலிகள் வாயிலாக வழங்கிவருகிறது. அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும், முக்கியமான பணிகளை எளிதாக்குவதற்கும் இந்த செயலிகள் உதவுகிறது. அந்த வகையில் உங்கள் ஃபோனில் கட்டாயம் இருக்கவேண்டிய 6 செயலிகள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News January 30, 2026
காமெடி நடிகர் குடும்பத்திற்கு கெளரவம்.. மகள் உருக்கம்

தந்தைக்கும், மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கெளரவம் கோடிகளில் சிலருக்கு தான் கிடைக்கும் என்பார்கள். அப்படியானால் அந்த கோடியில் ரோபோ சங்கரும், மகள் இந்திரஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெளரவத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்த, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இந்திரஜா நெகிழ்ந்துள்ளார்.
News January 30, 2026
திமுக வாரிசு அரசியல் செய்கிறதா? CM ஸ்டாலின் பதில்

சென்னையில் நடைபெற்ற ‘TAMILNADU SUMMIT’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு CM ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு எதாவது நிரூபிக்கப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.


