News September 4, 2024
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 2:14 மணிக்கு புறப்பட்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 22842) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் கண்னியாகுமாரியில் இருந்து வரும் 7ம் தேதி ஹவுரா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 12666) ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.
News September 15, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த 120 பத்திரிக்கையாளர்களுக்கு புதுச்சேரி அரசின் அங்கீகார அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சியில் செய்திதுறை இயக்குனர் முனுசாமி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.