News December 8, 2025

ஹமாஸ் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம்

image

ஹமாஸை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உடனான ஹமாஸின் உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண அமைப்புக்கு நிதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை காரணமாக, ஹமாஸை இன்னும் தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்கவில்லை.

Similar News

News March 3, 2026

BREAKING: விஜய் அறிவித்தார்

image

நாளை தஞ்சையில் நடக்கும் தவெகவின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு QR அனுமதி சீட்டு பெற்றவர்கள்(4,900 பேர்) மட்டுமே வரவேண்டும் என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News March 3, 2026

அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

image

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, ​​தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.

News March 3, 2026

பள்ளிகள் 10 நாள்கள் லீவு.. அரசின் கூடுதல் குட் நியூஸ்

image

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த முறை அதிக நாள்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இம்முறை ஏப்., 2-ம் வாரத்திற்குள் தேர்வுகள் முடிவடையுமாம். இதனால், மேலும் 10 நாள்கள் வரை விடுமுறை கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!