News August 3, 2024
ஹமாஸ் தலைவர் கொலையில் குழப்பம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது வெடிகுண்டு தாக்குதலிலா, ராக்கெட் தாக்குதலிலா என்பதில் குழப்பம் நிலவுகிறது. டெஹ்ரானில் அவர் தங்கியிருந்தது விருந்தினர் மாளிகை என்றும், ஒரு வாரத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைத்து, அதை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் தரப்பிலோ, ராக்கெட் வீச்சில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் நிலவுகிறது.
Similar News
News October 28, 2025
இந்திய கிரிக்கெட்டை துரத்தும் சோகம்

காயம் காரணமாக, பிரதிகா ராவல் மகளிர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, 2023 ODI ஆடவர் உலகக் கோப்பையின் போதும், வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். 2019 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வீரர்களின் இந்த விலகல்கள், ரசிகர்களின் மனதை பெரும் காயங்களாக மாறியுள்ளது.
News October 28, 2025
அக்டோபர்28: வரலாற்றில் இன்று

*1492 – கொலம்பஸ், கியூபாவை கண்டுபிடித்தார்.
*1627 – முகலாய பேரரசர் ஜஹாங்கீர் நினைவுநாள்.
*1922 – முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
*1955 – Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தநாள்.
*1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.
News October 28, 2025
கொளத்தூரில் போலி வாக்காளர்கள்? எல்.முருகன்

தமிழகத்தில் SIR அவசியமான ஒன்று என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்திலேயே ஸ்டாலின் இதை எதிர்ப்பதாக விமர்சித்த அவர், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையால், திமுகவின் முறைகேடுகள் அம்பலமாகும் எனவும் முருகன் தெரிவித்துள்ளார். நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெறவுள்ளது.


