News October 25, 2024
ஹபீபி படத்திற்கு நெல்லை முபாரக் வாழ்த்து

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று வாழ்வியலை சொல்லும் விதமாக தமிழர் மரபையும், சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வியல் முறைகளையும் ஒருங்கிணைத்து படைக்கப்பட்டுள்ள ஹபீபி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
Similar News
News February 1, 2026
நெல்லை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 1, 2026
நெல்லை: போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற மூவர்

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் இன்று வாகன தணிக்கை செய்தனர். அங்கே சந்தேகப்படும்படி வந்த மேலப்பாளையம், குறிச்சி முத்துராம் (19), பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு சிறாரை பிடித்து விசாரித்தபோது மூவரும் அரிவாளால் தாக்க முயன்றனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லையில் இரவு காவல் அதிகாரிகள் ரோந்து விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 31ம் இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


