News October 31, 2025

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

image

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இப்பணிக்காக விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். நவ.03-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

நாமக்கல்: இனி வங்கி செல்ல வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

நாமக்கல்: யோகா பயிற்சியாளர்கள் நியமனம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் நியமனம் செய்யபட உள்ளனர். தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் நவம்பர்-3ந் தேதி மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள விளையாட்டு அலுவலத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

பெங்களூரூ, நாமக்கல், காரைக்குடி, வழியாக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் 07355/07356 ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் வார இறுதி விடுமுறைக்கு பெங்களூரூ, ஓசூரில் இருந்து நாமக்கல் வந்து செல்லவும், நாமக்கலில் இருந்து காரைக்குடி, ராமேஸ்வரம் சென்று வரவும் இந்த ரயிலை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!