News February 18, 2025

ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

image

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 27, 2026

சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்தப்பா

image

சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து தனியாக இருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தப்பா உறவு முறையான முருகன்(46), பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News February 26, 2026

BREAKING: விருதுநகர்: EX அமைச்சர் வழக்கில் உத்தரவு

image

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.

News February 26, 2026

விருதுநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

விருதுநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரன் சூலக்கரைக்கும், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சாத்தூருக்கும், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஸ்ரீவி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!