News January 7, 2026
ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.
Similar News
News January 26, 2026
விருதுநகர்: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

விருதுநகர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1.<
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
விருதுநகர்: 12th போதும்..அரசு வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
விருதுநகர்: விபத்தில் தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை, அவரது மகன் முனுசாமி இருவரும் டூவீலரில் காரியாபட்டி அருகே மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி – மதுரை சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


