News April 7, 2025
ஸ்ரீவி ஆண்டாள் ,ரெங்கமன்னார் நான்காம் நாள் இரவு புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 4-ம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Similar News
News April 9, 2025
புவிசார் குறியீட்டை தொடர்ந்து சூப்பர் வாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இனிமேல், சம்பா மிளகாய் வத்தலுக்கு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் அதிகவிலை கிடைக்கும். ஏற்கெனவே, விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு, தனி டிமாண்ட் உள்ள நிலையில், சம்பா மிளகாய் வத்தல் விவசாயிகளுக்கு, இதனை ஏற்றுமதி செய்ய சூப்பரான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 9, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மகாவீரர் ஜெயந்தி தினமான நாளை(ஏப்.10) ஒரு நாள் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிமதாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 9, 2025
ஆண்டாள்,ரங்கமன்னார் ஏழாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 7-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் சாலியர் மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.