News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் சிவகாசி பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கு உரிமையாளருடன் லோடு இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News December 4, 2025
கூமாப்பட்டி இளைஞருக்கு கொலை மிரட்டல்

கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் இராமசாமியாபுரம் ஊர் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் முனியாண்டி பொதுவான சுற்றுச்சுவரை உடைத்ததை தட்டி கேட்டுள்ளார். இதற்காக முனியாண்டியை இருவரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 3, 2025
ராஜபாளையம்: காவலர்கள் கொலையில் பாய்ந்த குண்டாஸ்

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் கடந்த நவ.11 அன்று இரு கோவில் பாதுகாவலர்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கைதாகியுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
News December 3, 2025
விருதுநகரில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பந்தல்குடி காவல் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார். இதேபோல் மம்சாபுரம், ஆலங்குளம், கீழராஜகுலராமன், சிவகாசி நகர், எம்.புதுப்பட்டி, சாத்தூர் தாலுகா, வீரசோழன், ஏழாயிரம்பண்ணை ஆகிய காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


