News October 18, 2024
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (அக்.19) மின் குறைதீர் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா,(அக். 19) அன்று 11 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீவி., கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய உள்ளார் என ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சு.முனியசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
சாத்தூர்: பட்டாசு தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சங்கர்(24). காதல் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை இவரை ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ஓட ஓட வெட்டியத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி(23), ராஜபாண்டி(24), அபி(25) ஆகியோரை கைது செய்து மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News July 9, 2025
பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்யலாம் – ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கான காப்பீட்டை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
News July 8, 2025
விதி மீறிய 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டையில் விதிமீறல் இருந்ததாக சீல் வைக்கப்பட்ட பால்பாண்டியன் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு உற்பத்தி செய்ததாக ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சேர்வைக்காரன்பட்டியில் விதியை மீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி 9443967578 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.