News September 1, 2025

ஸ்ரீரங்கம்: ஹெலிபேடு தளத்தில் அதிகாரிகள் ஆய்வு

image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற செப்.,3-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை தருவதையொட்டி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள ஹெலிபேடு தளத்தில் தஞ்சை பிரிவு ஹெலிபேடு அதிகாரிகள், வருவாய்துறை, மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரதுறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை இன்று முதல் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

Similar News

News September 1, 2025

திருச்சி: சிறுவர்களுக்கு டாமினோஸ் எண் கணித விளையாட்டு

image

திருச்சி, அண்ணா விளையாட்டு மைதானத்தின் கிழக்கு பகுதியில் புதிதாக நடைமேடை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா பகுதியில் சிறுவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் டாமினோஸ் எண் கணித விளையாட்டு மற்றும் டாமினோஸ் ஆங்கில எழுத்து விளையாட்டு பலகைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனை சிறுவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.

News September 1, 2025

சிறுகமணி: மண்புழு உரம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

image

திருச்சி, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண் வளத்தை மேம்படுத்துவதற்கு மண்புழு உரம் மிகச்சிறந்ததாகும். மக்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம். மண்புழு உரம் வளர்க்கும் பைகள் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News August 31, 2025

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓரிகாமி பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், சிறுவர்களுக்கு, கிராப்ட் பேப்பர்களை கொண்டு ஓவியங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி தலைமை வகித்தார். மைய நூலகர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். அரசங்குடி அரசுஉயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் பயிற்சியளித்தார்.

error: Content is protected !!