News December 26, 2025

ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Similar News

News December 29, 2025

திருச்சியில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், 2 ஓடி டெக்னீசியன், 3 செக்யூரிட்டி, ஒரு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஒரு துப்புரவு பணியாளர், ஒரு முதுநிலை ஆய்வக நுட்புநர், ஒரு ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் புத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை முதல்வரிடம் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

திருச்சி மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு இன்று (டிச.29) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

திருச்சி மைய நுாலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு டிச.29ம்தேதி (திங்கள் கிழமை) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500,ரூ.400,ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!