News November 23, 2025

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Similar News

News January 26, 2026

திருச்சி: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>’இங்கே கிளிக்’<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 26, 2026

திருச்சி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

திருச்சி மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

திருச்சி அருகே விபத்து: தடுப்புச் சுவரில் மோதி விவசாயி பலி

image

துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மலையாளி (53) என்பவர் எதிர்பாராத விதமாக சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!