News January 23, 2026

ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் (31), திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

காஞ்சிபுரத்தில் EB பில் எகுறுதா..?

image

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு<<>> கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

காஞ்சிபுரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2026

குன்றத்தூர் அருகே துணிகரத் திருட்டு!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த சியாம் லியோ முத்து நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(45). நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர்களுடன் சினிமா பார்க்க சென்ற அவர், திரும்பிய போது, வீட்டின் கடவு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் மற்றும் 30 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த போலீஸ் புகாரில், திருமுடிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!