News October 6, 2025
ஸ்தம்பித்த தி.நகர்…!

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தி.நகர், பாண்டிபஜார், மயிலாப்பூர் பகுதியில் உள்ள வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால், அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.
Similar News
News October 6, 2025
சென்னை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 6, 2025
சென்னை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!
News October 6, 2025
சென்னை அப்போலோவில் ராமதாஸ் அனுமதி

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், தனது முழு உடல் பரிசோதனைக்காக இரண்டு நாட்கள் முன்பே அப்போலோ மருத்துவமனையில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்ற நிலையில், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் பரிசோதனை முடிந்த பின்பு, தைலாபுரம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை பார்க்க அன்புமணி வருகை தந்துள்ளார்.