News December 29, 2025
ஸ்தம்பித்த செம்மொழி பூங்கா

காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து செம்மொழி பூங்காவை கண்டு ரசித்தனர். இதனால், அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.
Similar News
News January 22, 2026
கோவை: காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஹன்சிகாவை, அதே வகுப்பில் பயிலும் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவியை, ஹர்ஷவர்தன் காதலிக்க வற்புறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்தில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 22, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
கோவை: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை கிணத்துக்கடவு – பொள்ளாச்சி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


