News January 5, 2026
ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும் சிரிப்பு தெரபி!

’வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்பது பழமொழி மட்டுமல்ல, சயின்ஸ்! இன்றைய பரபரப்பான உலகில், ஸ்ட்ரெஸ்ஸை தூக்கி எறிய உதவும் ஒரு ‘மேஜிக் டூல்’ இந்த ‘சிரிப்பு தெரபி’. வாய்விட்டு சிரிக்கும்போது, மூளையில் ‘எண்டோர்பின்’ எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு, ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரஷனை குறைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். SMILE PLEASE!
Similar News
News January 30, 2026
கொச்சையாக பேசுபவர்களை கொண்டாடும் திமுக: வானதி

TN-ல் பெருகும் பாலியல் குற்றங்களால் பெண்கள் பயப்படுவதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னையில் அரசு கல்லூரியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த அவர், பெண்களை வெறும் சதை குவியலாக கொச்சைப்படுத்தி பேசுபவர்களை கொண்டாடும் திமுகவிடம் அதிகாரம் கிடைத்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் விரைவில் மீண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
காங்கிரஸிடம் திமுக கெஞ்சுகிறது: EPS

ராகுல் காந்தி, கனிமொழியின் சந்திப்பை குறிப்பிட்டு திமுக கூட்டணியை EPS விமர்சித்தார். டெல்லியின் அடிமை அதிமுக அல்ல, திமுகதான் என்றும், இன்று காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு திமுக செல்லும் நிலையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாகவும், அந்த கூட்டணி இருக்குமா இல்லையா என்ற தடுமாற்றம் வந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News January 30, 2026
திருப்பதியில் முத்தம்.. மன்னிப்பு கேட்ட தம்பதி

திருப்பதியில் <<18991211>>போட்டோஷூட் <<>>எடுத்தபோது, முத்தமிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த திருமால், காயத்ரி தம்பதி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர். திருப்பதியில் போட்டோ, வீடியோ எடுப்பது தவறு என்று தெரியாது எனவும் அந்த போட்டோ & வீடியோக்களை டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர்கள், பரிகாரமாக திருப்பதியில் சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


