News March 22, 2026

ஸ்டிக்கர் ஒட்டுகிறதா தவெக?

image

தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர்சில்வர் பாத்திரங்கள், பூஸ்ட் பாக்ஸ், குடிநீர் பாட்டில் என அடுத்தடுத்து சிக்குவது செய்திகளாக வெளியாகின்றன. ஆனால், மற்ற கட்சிகளும் ஹாட் பாக்ஸ் என பரிசுப் பொருள்களை வழங்கும்போது எப்படி தவெக மட்டும் ஹெட்லைனில் வருகிறது என்று தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இது அரசியல் களத்தில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 9, 2026

போன முறை எதிரி.. இந்த முறை நண்பர்

image

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், MP மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு காங்., & அதன் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என தனது X பக்கத்தில் மாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் இருவரும் எதிரெதிராக நின்று களம் கண்ட நிலையில், தற்போது கூட்டணி கணக்கு மாறியதால் காட்சியும் மாறியுள்ளது.

News April 9, 2026

KKR vs LSG: வெற்றிக் கணக்கை தொடங்குமா KKR?

image

KKR – LSG அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2-ல் தோற்ற KKR, PBKS-க்கு எதிரான 3-வது போட்டியின்போது மழைக் குறுக்கிட்டதால் ஒரு புள்ளி பெற்றது. அதேநேரம், 2 போட்டிகளில் 1-ல் வென்ற LSG, நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது. அதேபோல், ஹோம் கிரவுண்டில் நடக்கும் இன்றைய போட்டியில் முதல் வெற்றியைப் பெற KKR தீவிரமாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 9, 2026

புதுச்சேரி வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்

image

புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் & பெண்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!