News November 7, 2025
ஸ்டாலின் டென்ஷனுக்கு இதுதான் காரணமா?

நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் எதிர்ப்பால் மேயர் மாற்றப்பட்டது, பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மாற்றப்பட்டது ஆகிய சம்பவங்களே இதற்கு சாட்சி என்கின்றனர். இந்நிலையில், உள்கட்சி பூசலால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தலைமைக்கு ரிப்போர்ட் போனதால் தான், <<18218356>>பதவி பறிக்கப்படும்<<>> என ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை செய்தாராம்.
Similar News
News February 10, 2026
T20 WC: கனடாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா

டி20 WC-ல் 57 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(59), டேவிட் மில்லர்(39), ஸ்டப்ஸ்(34), ஆகியோர் அதிரடியாக விளையாட தெ.ஆப்., 213 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய கனடாவில் நவ்நீத்(64) அரைசதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை மட்டும் எடுத்து கனடா தோல்வியை தழுவியது.
News February 10, 2026
E-Pantry.. ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி

IRCTC இப்போது ரயில் பயணிகளுக்காக E-Pantry என்ற ஆன்லைன் உணவு முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை முதலில் 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலோ அல்லது அதற்கு பின்னரோ ஆன்லைனில் உணவு மற்றும் தண்ணீரை ஆர்டர் செய்யலாம். பயணத்தின்போது அவர்களுக்கு இருக்கைக்கு வந்தே உணவு வழங்கப்படும்.
News February 10, 2026
ராசி பலன்கள் (10.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


