News April 7, 2026
ஸ்டாலினும் பாஜகவும் ரகசிய கூட்டணி: மம்தா பானர்ஜி

ஸ்டாலினுடன் பாஜக ரகசிய கூட்டணி உடன்பாடு வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளது தேசிய அளவில் விவாதமாக மாறியுள்ளது. மேற்கு வங்கத்தின் திறமையான அதிகாரிகள் TN-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இங்கு தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பாஜக நியமித்துள்ளதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியில் முக்கிய தலைவர்களில் ஒருவரான மம்தாவின் இந்த பேச்சு ஸ்டாலினை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
Similar News
News April 14, 2026
பன்மைத்துவம்தான் இந்தியாவின் வலிமை: CM

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான் என X-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மையை புறந்தள்ளுவோம் என்ற அவர், அம்பேத்கர் பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்க நமது உறுதியை வலிமைப்படுத்த வேண்டும் என்றார். மேலும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளி, சமத்துவத்தை தேர்ந்தெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News April 14, 2026
CINEMA 360°: ஹீரோவாக அறிமுகமாகும் சாய் அபயங்கர்

*AGS Productions தயாரிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார். * ‘அறம்’ படப்புகழ் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘காலனி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. *சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தின் OTT உரிமையை ₹25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. *தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜோதிகா பகிர்ந்த புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வருகின்றன.
News April 14, 2026
சித்திரையில் புத்தாண்டு ஏன்?

தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று ஒரு சிலர் சொல்கின்றனர். ஆனால், சித்திரையில் புத்தாண்டு கொண்டாட காரணம் இருக்கிறது. பண்டைய காலத்தில், மாதங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பெரும்பொழுதுகள்தான் இருந்தன. அவற்றில், இளவேனில் காலத்தின் முதல் மாதமான சித்திரைதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இக்கருத்தை மறுப்போரும் உள்ளனர்.


