News January 3, 2025
‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்ன ஆகும்

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 5, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விஷ்ணு திருமண மண்டபம், காஞ்சிபுரம் அருகே உள்ள ARC திருமண மண்டபம், உத்திரமேரூர் அருகே உள்ள கலைஞர் நூலகம், குன்றத்தூர் அருகே உள்ள வைப்பூர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
News August 5, 2025
காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை…

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா? என கமெண்டில் சொல்லுங்க
News August 5, 2025
பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத் தலைமையிடத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை dipr.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து 10.08.2025-க்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.