News December 31, 2025
ஷமி விஷயத்தில் பிசிசிஐ U-Turn?

நல்ல ஃபார்மில் இருந்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஷமி இடம்பிடிக்காதது பேசுபொருளானது. இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் ஷமியின் செயல்பாட்டை பிசிசிஐ கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஷமி உடற்தகுதியுடன் இருந்தால் நியூசிலாந்து ODI தொடருக்கு அவரை தேர்வு செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். ஷமி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 2027 WC வரை இந்திய அணியில் நீடிப்பார்.
Similar News
News December 31, 2025
உங்கள் குழந்தை திக்குறாங்களா? சரி செய்ய Tips

திக்குவாயை சரி செய்ய டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், இதற்கு சில பயிற்சிகளும் உள்ளன. ➤எழுத்துகளை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும் ➤மூச்சு பயிற்சி செய்வது உதவலாம் ➤வாக்கியங்களை வேகமாக படிக்க வைக்கலாம் ➤பாடல்கள் பாடுவதும் உதவும். குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணலாமே!
News December 31, 2025
மண்ணுலகை விட்டு மறைந்தார் (கடைசி PHOTO)

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் நேற்று முதல் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெற்ற தாயின் உடலை, தனது தோளில் சோகத்துடன் மோகன்லால் தூக்கி செல்லம் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. தாயின் பிரிவால் மிகுந்த மனவேதனையுடன் இருக்கும் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
News December 31, 2025
செய்தி தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்திய விஜய்

தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். அதன்படி பொறுப்பாளராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செய்தித் தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் சத்தியகுமார், தேன்மொழி பிரசன்னா ஆகியோர் உள்ளனர். மேலும் மாநில செய்தித் தொடர்பாளர்களாக முகில் வீரப்பன், அமலன், ஆனந்தஜித் உள்ளிட்டோரை விஜய் நியமித்துள்ளார்.


