News April 21, 2024
ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 20, 2025
திருவள்ளூர்:தூங்கிய கணவனை கொன்ற மனைவி

புழல், காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா. இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி நிலவர் நிஷா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.கடந்த 10ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நிலவர் நிஷா, எண்ணெயை கொதிக்க வைத்து, துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றினார். உடல் முழுவதும் வெந்த நிலையில், காதர் பாஷா நேற்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 20, 2025
சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு சிறை

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரவீன் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை மற்றும் 25000 அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
News August 20, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

திருவள்ளூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு ஹரி கோபால் கல்யாண மண்டபம், பொன்னேரிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், மீஞ்சூர் வட்டாரத்திற்கு அத்திப்பட்டு கலைஞர் அரங்கம், எல்லாபுரம் வட்டாரத்திற்கு பூச்சி அத்திப்பட்டில் உள்ள காமராஜர் திருமலை மண்டபம்,பூவிருந்தமல்லிக்கு கூடப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.