News January 22, 2026

வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

image

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.

Similar News

News February 3, 2026

திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிப்பு: பாஜக

image

திமுகவின் ஆட்சியில் TN-ல் ரவுடியிசமும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், தேனி மற்றும் ஓசூரில் பட்டப்பகலில் நடந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 3, 2026

JEE 2-ம் கட்ட தேர்வு.. மாணவர்கள் கவனத்திற்கு

image

பொறியியல் படிப்புகளுக்கான JEE 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 தொடங்கி ஏப்.9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.25-க்குள் jeemain.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் தேசிய தேர்வு முகமை என தெரிவித்துள்ளது. JEE மெயின் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், வரும் பிப்.12-ல் முடிவுகள் வெளியாகின்றன.

News February 3, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 600 ▶குறள்:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
▶பொருள்: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

error: Content is protected !!