News January 2, 2026

வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

image

திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 2026-ம் ஆண்டில் தான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது மிகவும் மகிழ்ச்சி என்றார். அரசியல் தலைவர்கள் மக்களிடம் சென்று தங்களது கருத்துகளை கூற, நடைபயணம் உதவும் என்றும், நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Similar News

News February 5, 2026

எப்ஸ்டீன் சர்ச்சை.. மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்

image

எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு கணத்திற்காகவும் வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும் என அவரது <<19051133>>Ex.மனைவி<<>> கூறியிருந்தார். இந்நிலையில், சிறுமிகள் குறித்து கசிந்த மின்னஞ்சல்களில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

News February 5, 2026

பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்குறீங்களா? உஷார்

image

USA-வில் கர்ப்பிணி ஒருவர் பாலை சுட வைக்காமல் அப்படியே குடித்துள்ளார். இதனால், பாலில் இருந்த பாக்டீரியாவால் லிஸ்டீரியா என்ற தொற்று ஏற்பட, தொற்றுடன் பிறந்த அவரது குழந்தை சில மணிநேரங்களில் இறந்துள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் காய்ச்சாத பாலை குடித்தால் நோய்வாய்ப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில சமயங்களில் இது போன்ற தொற்று நோய் ஏற்பட்டு, கருச்சிதைவும் ஏற்படலாம் என்கிறார்கள்.

News February 5, 2026

தங்கம் விலை.. HAPPY NEWS

image

இந்த வார தொடக்கம் முதலே அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ₹4,640 குறைந்து ₹1,14,560-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை வெளியான நேரத்தில் இருந்த சர்வதேச சந்தை தற்போதும் சரிந்து வருகிறது. இதனால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தங்கம் வாங்க நினைப்போர் உடனே கடைகளுக்குச் செல்லலாம் என்றும் கூறுகின்றனர்.

error: Content is protected !!