News July 27, 2024
வைகை எக்ஸ்பிரஸ் 2 வாரங்களுக்கு ரத்து

தாம்பரம் பணிமனையில் 2 ஆம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் – மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்(12635) ஆக.1 முதல் ஆக.14 வரை செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்படும். எழும்பூர் – திருச்சி எக்ஸ்பிரஸ்(12653)ஆக.2 முதல் ஆக.15 வரை செங்கல்பட்டில் இருந்து இரவு 12.40 க்கு புறப்படுகிறது.
Similar News
News April 7, 2026
மதுரை: தூக்கத்தில் இளைஞர் மரணம்; பெற்றோர் அதிர்ச்சி.!

பெருங்குடி அருகே பரம்புபட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சந்துரு (25). நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நடு இரவில் முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, மகன் சந்துருவை எழுப்பியுள்ளார். ஆனால் சந்துரு அசைவின்றி இருந்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சந்துரு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.