News April 2, 2024
வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின்மை மற்றும் வெயில் தாக்கம் காரணமாக வைகை ஆறு வறண்டு போனது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீருக்காக வைகை ஆற்றை சார்ந்துள்ள கடமலை – மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.
News February 7, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 7, 2026
தேனி: சிலிண்டர் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


