News May 18, 2024

வைகாசி விசாகம் சிறப்பு ரயில் இயக்கம்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நெல்லையில் இருந்து 22 அன்று காலை 6.40 மற்றும் 11 மணிக்கு திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 9.15 மற்றும் 1 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

Similar News

News March 8, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு….!

image

தூத்துக்குடி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

தூத்துக்குடியில் ஒருவர் குத்தி கொலை

image

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் காட்டு பகுதியில் லாரி ஷெட் உரிமையாளர் ஆறுமுகம்(52) கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின் பேரில் சென்ற சிப்காட் போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உறவினருடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.

News March 8, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் தீர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பகுதியில் உள்ள ஒரு சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!