News June 17, 2024
வே2நியூஸ் செய்தி எதிரொலி: அதிகாரிகள் நடவடிக்கை

கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கி வந்த நியாய விலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸ்-ல் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டிடத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
Similar News
News July 7, 2025
விழுப்புரம் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
News July 7, 2025
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு 10ஆம் தேதி பேச்சுப்போட்டி

தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி வரும் 10 ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<