News January 21, 2026
வேளாண் விதைப்பைகள் திருடிய உதவி அலுவலர் சஸ்பெண்ட்

வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார வேளாண் மையத்தில் ஜன-15 அன்று அரசு விடுமுறை நாளில் உதவி அலுவலர் முருகன் என்பவர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த விதை பைகளை திருடிச் செல்ல முயன்றார். இதுகுறித்து உதவி இயக்குனர் சிவமணி அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசில் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து முருகன் இணை இயக்குனர் காளியப்பன் முருகனை ஜன-20 சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

கிருஷ்னகிரியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை குறித்து (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
கிருஷ்ணகிரி: சாலையில் பறிபோன உயிர்!

வேப்பனப்பள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிசாமி, சந்திரன். இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னே வந்த லாரி மோதி பைக் விபத்துக்குளானது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


