News June 25, 2024
வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க அழைப்பு

மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
BREAKING: திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்…!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கருவறையில் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற பிரதமர், நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் மலை சுற்றுவட்டார பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
News March 1, 2026
FLASH: மதுரையில் 4400 கோடி திட்டங்களை துவக்கி வைத்த மோடி

வணக்கம், புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதில் பெருமை அடைகிறேன் எனக்கூறி மதுரையில் 4400 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த மோடி மரக்காணம் புதுவை பிரிவு பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவு நான்கு வழிச்சாலைகள் மறுசீரமைப்பு. பெரம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில்வே நிலையங்கள் திறந்து வைத்தார். இதில் எடப்பாடி பழனிச்சாமி, எல் முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்பு.
News March 1, 2026
BREAKING: மதுரை வந்த பிரதமர் மோடி

தஞ்சையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். மோடி வருகை ஒட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


