News March 15, 2025
வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு கனிமொழி எம்.பி நன்றி

2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் -க்கு கனிமொழி எம்.பி இன்று (மார்ச்.15) நன்றி தெரிவித்துள்ளார். “வேளாண்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கவும், மானியங்களின் வழியாக விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து” செய்தி வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 24, 2025
தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
News August 23, 2025
தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 23, 2025
கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.