News February 6, 2025
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மர கன்றுகள்

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மர கன்றுகள் சாகுபடி செய்து பயன் பெறும் வகையில் தேக்கு, கொய்யா, மஹா கனி, நீர் மருது, இலுப்பை மற்றும் நாவல் மர கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) <
News April 21, 2025
தோஷங்கள் நீக்கும் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர்

நாகை மாவட்டம் திருநின்றிவூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில். வேண்டியதை நினைத்து சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து வேண்டினால் தோஷங்கள் நீங்கும், ஆளுமைத்திறன், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. திருக்கோயிலில் சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற நாட்கள் சிறப்பானதாகும். சேர் செய்யவும்.
News April 20, 2025
நாகையில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.