News July 24, 2024
வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.!

திருச்சி வேளாண்மை துறை மூலம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோராகும், திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10,12ம் மதிப்பெண் சான்றிதழ், தோட்டக்கலை பட்ட படிப்பிற்கான சான்றிதழ், தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
Similar News
News March 6, 2026
திருச்சி: பைக் விபத்தில் சிறுவன் பலி

திருச்சி இரைட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்(17). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராகவன் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது ராயல் ரோட்டில், முன்னால் சென்ற காரை ராகவன் முந்தி முயன்றபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், கார் ஏறியதால் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமயில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் ஸ்ரீராம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
News March 5, 2026
திருச்சி: பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கோடை காலத்தினை முன்னிட்டு, திருச்சி மாவட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் பாலிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்,
News March 5, 2026
விவசாயிகள் வேளாண் பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகள் 2025-26 ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் நவரை, உளுந்து, சோளம், எள் பயிர்களை மார்ச் 17 மற்றும் கரும்பை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு கட்டணமாக 1 ஏக்கர், நெல்லுக்கு ரூ.578, சோளத்துக்கு ரூ.234, எள்ளுக்கு ரூ.230, கரும்புக்கு ரூ.3,300ஐ, இ.சேவை மையங்கள், கூட்டுறவு, தேசிய வங்கிகளில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.


