News March 25, 2026
வேல்முருகன் துணையாக இருக்க வேண்டும்: அதிமுக

திமுக கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலை வேல்முருகன் சந்திக்க வேண்டும் என அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் தமிழரசு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன், அதிமுக ஆட்சி அமைவதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி <<19449630>>ஏற்கெனவே வேல்முருகன்<<>> பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 14, 2026
மிசாவுக்கே பயப்படல, அமித்ஷாக்கா பயப்படுவேன்: CM

கல்வி நிதி ₹2,000 கோடி வேண்டும் என்றால், ஹிந்தி படிக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ₹2,000 கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய EPS இல்லை என்ற அவர், நான் மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன் என்றார். தன்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான் என தெரிவித்துள்ளார்.
News April 14, 2026
சர்க்கரை நோயாளிகள் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

முருங்கை இலை டீ நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➤4- 6 முருங்கை இலை எடுத்து, நிழலில் உலர்த்தவும் ➤இதனை, உலர்த்திய பிறகு பொடி செய்யவும் ➤இப்பொடியை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து, தேன் சேர்த்தால் சுவையான, ஹெல்தியான முருங்கை இலை தேநீர் ரெடி. இப்பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 14, 2026
அன்புமணியுடன் சமரசமா? ராமதாஸ் பதில்

அன்புமணியை அரசியலுக்கு அழைத்து வந்தது தான் செய்த இமாலய தவறு, ஸ்ரீகாந்தி பொருத்தமாக இருப்பார் என ராமதாஸ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். கட்சிக்காக உழைத்த அன்புமணியை விடுத்து மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மகன் அனைவரையும் அரவணைத்து செல்லாததால் இந்நிலை ஏற்பட்டது என்றார். மேலும், அன்புமணியுடன் இனி சமரசமே இல்லை எனவும் தெரிவித்தார்.


