News June 27, 2024

வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் காலமானார்

image

ஆவடி அருகே வெள்ளானூர் வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் (82) நேற்று ( ஜூன் 26) மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 27) பிற்பகல் 3 மணி அளவில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடைபெறும். மதியம் 2.45 மணி வரை மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 2, 2026

பூந்தமல்லி: எம்.எல்.ஏவிற்கு மக்களின் நன்றி!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் கருணாகரச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அமுதூர்மேடு கிராமம், தந்தை பெரியார் தெருவில் அமைந்துள்ள 4 ஆவது குறுக்கு தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக சிமெண்ட் சாலை வழங்கிய ஆவடி எம்.எல்.ஏ சா.மு நாசருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

News March 2, 2026

திருவள்ளூரில் பயங்கர தகராறு!

image

கடம்பத்தூர் அருகே உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர்(20). இந்நிலையில், நேற்று முன் தினம் சிவசங்கர் வீட்டில் இருந்த போது அங்கு வந்த பிஞ்சிவாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவ்ரது உறவினர்களான எட்டியம்மாள், தீபிகா ஆகியோர் ஏற்கனவெ தங்களுக்குள் இருக்கும் முன் பகையை மனதில் வைத்து சிவசங்கரை ததாக்கினர். இதில் சம்மந்தப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 2, 2026

கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்(21). இவர், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(20) என்பவருடன் நேற்று(மார்ச் 1) ஒரே பைக்கில் தடா நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். மீண்டும் வரும் போது சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கதிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!