News April 27, 2025
வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் என்ற பலே கில்லாடி கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் அம்பலம் ஆகவே தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற மோசடியில் சிக்காமல் உஷாரா இருங்க.
Similar News
News April 27, 2025
திருப்பத்தூரில் மிஸ் பண்ணகூடாத TOP 5 இடங்கள்

திருப்பத்தூரில், பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்டது. இந்த விடுமுறையை கழிக்க நம்ம திருப்பத்தூரிலேயே TOP 5 இடங்களை பார்க்கலாம்.
▶ ஏலகிரி மலை
▶ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
▶வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
▶ கோவிந்தபுரம் அருவி
▶ அண்டியப்பனூர் டேம்
இந்த இடங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 26, 2025
திருப்பத்தூர் பெயர் காரணம்!

திருப்பத்தூர் பெயருக்கு பின்னால் பல காரணங்களுக்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் இதற்கு “திருப்பத்தூர்” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், திருவனபுரம் என்று அழைக்கப்பட்டு வந்ததை விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களைப்போல் உங்கள் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள இதனை ஷேர் பண்ணுங்க!