News January 16, 2026

வேலை கேட்டு அலையமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

image

கடந்த 8 ஆண்டுகளில் படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளுக்கு (கார்ப்பரேட் நிறுவனங்கள்) இசைத்துறை சென்றுவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனால் வேலையை கேட்டு எங்கும் அலையமாட்டேன் எனவும், தகுதி மற்றும் திறமையை கொண்டு தனக்கான வேலையை சம்பாதிப்பது தான் எனது நேர்மை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அதுவரை எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர் PHOTO

image

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினர் மற்றும் அமைப்புகளை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

News February 9, 2026

₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடு!

image

₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் அரண்மனை வதோதராவில் அமைந்துள்ளது. இது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெய்க்வாட் அரச குடும்பத்திற்காக பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ராபர்ட் சிசோம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 170 அறைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், ரவிவர்மா ஓவியங்கள் மற்றும் ஒரு கோல்ஃப் கிளப் உள்ளன.

News February 9, 2026

ரோஹித், கோலியை B பிரிவுக்கு மாற்றிய BCCI

image

BCCI வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இதுவரை A+ பிரிவில் இருந்த ரோஹித், கோலி இருவரும் கிரேடு B-ல் சேர்க்கப்பட்டுள்ளனர். பும்ரா, கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் கிரேடு A-ல் உள்ளனர். ரோஹித் மற்றும் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அவர்களுக்கு கிரேட் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்குமுன் இருந்த A+ பிரிவை ஒட்டுமொத்தமாக BCCI நீக்கியுள்ளது.

error: Content is protected !!