News January 16, 2026

வேலை கிடைக்காததற்கு இது தான் காரணமா?

image

இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கவில்லை என TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

Similar News

News January 28, 2026

விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: சரத்குமார்

image

உங்களை போல கட்சியை கலைக்கும் நிலை விஜய்க்கும் ஏற்படுமா என கேட்கப்பட்டதற்கு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு தான் 17 ஆண்டுகள் கட்சியை நடத்தியதாகவும், விஜய்யுடன் தன்னை ஒப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் கட்சியை கலைக்கவில்லை என கூறிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் விவரித்தார்.

News January 28, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹35,000 மாறியது

image

<<18982860>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹35,000 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹400-க்கும், 1 கிலோ ₹4 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026 ஜன.1-ல் வெள்ளி 1 கிலோ ₹2.56 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News January 28, 2026

டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்

image

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & Screening மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் *விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

error: Content is protected !!