News April 5, 2025
வேலைவாய்ப்பு மோசடி: காவல்துறையை எச்சரிக்கை

வேலைவாய்ப்பு மோசடி கொடுத்து திருச்சி மாவட்ட காவல்துறையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்
நிறுவனம் பற்றிய நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், வேலை வாய்ப்பு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் வரை உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
தேவையற்ற சலுகைகள், முன்பணம் செலுத்த சொல்வது, நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 7, 2025
திருச்சி: தாய்ப்பால் தானம் செய்ய அழைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பால் வங்கிக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 639 பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து 192 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 634 பிறந்த குழந்தைகளின் நலனுக்கு உதவியுள்ளது. இந்த அளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இன்னும் அதிகமான தாய்மார்கள் முன்வந்து தானம் செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 6, 2025
உடையாம்பட்டியில் பிடிப்பட்ட 10அடி மலைப்பாம்பு

துவரங்குறிச்சி அடுத்த உடையாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவரது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது தோட்டத்தின் அருகே சுமார் 10அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதையறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடிப்பான் உதவியுடன் மலை பாம்பினை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை வனத்துறையினர் பாதுகாப்பு வனப்பகுதியில் விட்டனர்.
News August 6, 2025
திருச்சி – பாலக்காடு ரயில் புறப்படும் இடம் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயிலானது, வரும் 19 ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக, மதியம் 1:12 மணிக்கு திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பாலக்காடு செல்லும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.