News October 19, 2024
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 58 ஆண்கள், 25 பெண்கள் என 83 தேர்வாகினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். மேலும், முதற்கட்ட தேர்வில் 143 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வின் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News July 10, 2025
இறந்து கிடந்த முதியவரின் காலை கடித்து குதறிய நாய்கள்

ஜமீன் பல்லாவரம், சுபம் நகர், மூவரசம்பட்டு ஏரி அருகே நேற்று காலை நடைப்பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள காலி இடத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் காலை நாய் ஒன்று கடித்துக் குதறியது. தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News July 10, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜூலை 09) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!
News July 9, 2025
ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!