News October 24, 2024
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை.

மாதாந்திர உதவித்தொகை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200,
SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300,
HSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹400, பட்டதாரிகளுக்கு ₹600 வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600 ₹1000 வரை உதவித்தொகை கிடைக்கும்.
தமிழக அரசு அறிவிப்பு.
Similar News
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
குன்றத்தூர் அருகே துணிகரத் திருட்டு!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த சியாம் லியோ முத்து நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(45). நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர்களுடன் சினிமா பார்க்க சென்ற அவர், திரும்பிய போது, வீட்டின் கடவு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் மற்றும் 30 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த போலீஸ் புகாரில், திருமுடிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 8, 2026
காஞ்சி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். காஞ்சி மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


