News April 14, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 15, 2025
திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
News April 15, 2025
விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<