News July 11, 2024
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

அரியலுர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News April 21, 2025
விக்கிரமங்கலம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடியைச் சேர்ந்தவர் சரோஜா(80). இவர் தனது வீட்டின் வாசலில் இருந்தபோது, அந்த வழியாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வெண்மான் கொண்டான் வடக்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.
News April 20, 2025
அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News April 20, 2025
அரியலூர்: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர்

அரியலூர் மாவட்டம் தா. பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கால பைர்வர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன் பிரச்னை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்