News July 9, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு 1/2

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News July 9, 2025
கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் குறைத் தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ராஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள பொதுமக்கள் எஸ்.பி-யை நேரில் சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி அறிவுரைத்தனார்.
News July 9, 2025
கள்ளக்குறிச்சியில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

கள்ளக்குறிச்சியில் பண்ணை சாரா கடன் மற்றும் இதர நீண்ட கால நிலுவைகளுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் வெளியிட்ட தகவலின்படி, கடன்தாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை 9% சாதாரண வட்டியுடன் 2025 செப்டம்பர் 23-க்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் 2/2

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்