News January 11, 2025
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற அழைப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதில், விண்ணப்பிக்க மார்ச் மாதம் 10ம் தேதிக்குள், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
செங்கை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
செங்கை: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கோவில்பாக்கத்தைச தாம்பரம் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 17 வயது கல்லூரி மாணவியிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கீர்த்திவாசன் (36) அவர் அத்துமீறி முயன்றார். அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
செங்கை: வீட்டில் இளம்பெண் மர்மச்சாவு!

தாழம்பூர் அருகே ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட்ராமன் தனது மனைவி லட்சுமி உடன் வசித்து வந்தார். வெங்கட் ராமன்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தததால் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று காலை உடன் பணி செய்பவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெங்கட்ராமன் போதையில் இருந்ததால் இதைப்பற்றி காவல்துறையிடம் புகார் செய்தனர்.


