News August 23, 2024

வேலைக்கு போகாதீங்க… டிராவிட்டிடம் மனைவி கெஞ்சல்

image

வேலைக்கு போக வேண்டாம், வீட்டில் இருந்து மகன்களை கவனித்து கொள்ளும்படி மனைவி தன்னிடம் வலியுறுத்துவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என்றார். உங்கள் சுயசரிதையில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, சம்பளம் நன்கு வழங்கப்பட்டால் தாமே நடிப்பதாக பதிலளித்தார்.

Similar News

News December 21, 2025

தவெகவினர் குரைக்கும் நாய்கள் அல்ல: அருண்ராஜ்

image

தவெக நிர்வாகிகள் யாரும் நாய்கள் கிடையாது, குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது என அருண்ராஜ் கூறியுள்ளார். யாருக்கும் ஜால்ரா அடிக்கும் நாய் நானில்லை அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த அவர், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாமல் டீசண்ட் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் என விஜய் சொல்லியிருக்கிறார் என கூறியுள்ளார். மேலும், நடிகர் விஜய்யை விட, அரசியல்வாதி விஜய் மிகவும் வலிமையானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 21, 2025

PM மோடியை அன்போடு அழைக்கிறேன்: CM ஸ்டாலின்

image

இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடி அலைகிறவர்களுக்கு நம் நாகரிகம் கண்ணுக்குத் தெரிவதில்லை என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நம் நாகரிகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவே பொருநை அருங்காட்சியகத்தை அமைத்திருப்பதாக கூறிய அவர், அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பார்க்க PM மோடியையும், நிர்மலா சீதாராமனையும் அன்போடு அழைப்பதாகவும் பேசியுள்ளார்.

News December 21, 2025

பொங்கல் திருநாளில் தேர்வு.. தமிழர்களுக்கு அதிர்ச்சி!

image

பொங்கல் அன்று பட்டய கணக்காளர்(CA) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் நாளில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் தேர்வுகளை நடத்துவதால், தமிழக இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் உள்ளிட்டோர், தமிழர்களின் உணர்வுகளை மதித்து உடனே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!