News December 10, 2025
வேலூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

வேலூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
வேலூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது!

விரிஞ்சிபுரத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுகன்யா (27) என்பதும், தப்பியோடிய அவருடைய கணவர் சதீஷ் (32) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் மேலும் தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.
News December 11, 2025
வேலூர்: சிறையில் கைதி தற்கொலை முயற்சி!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (28) போக்சோ வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த ஜூலை மாதம் முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.10) சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வரும் இவர் அங்கு உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சிறை காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 11, 2025
வேலூர்: முதியவர் நீரில் மூழ்கி பலி!

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்பாடி போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


