News February 15, 2026
வேலூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!
Similar News
News February 16, 2026
வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்க உள்ள முதல்வர்!

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை நாளை (பிப்ரவரி 16) காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News February 15, 2026
எஸ்பி தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (பிப்ரவரி 16) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. வேலூரின் பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலாற்றில் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி வேலூர் எஸ்பி சிவராமன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


